பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிக விவாதங்களில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 April 2022 1:34 AM IST (Updated: 20 April 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிக விவாதங்களில் பங்கேற்ற பெருமை தி.மு.க. எம்.பி. எம்.எம்.அப்துல்லாவுக்கு கிடைத்து இருக்கிறது.

புதுடெல்லி, 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிக விவாதங்களில் பங்கேற்ற பெருமை தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவுக்கு கிடைத்து இருக்கிறது. 162 விவாதங்களில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டதால் முதல் இடத்தை அவர் பிடித்துள்ளார்.

இதுகுறித்து ‘டுவிட்டரில்’ அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “நம்பிக்கை வைத்து என்னை அனுப்பிய தலைவரின் நம்பிக்கையை என்றும் காப்பேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story