சேர்ந்து வாழும் உரிமை பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது - ஐகோர்ட்டு


சேர்ந்து வாழும் உரிமை பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது - ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 20 April 2022 11:42 AM IST (Updated: 20 April 2022 11:42 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உரிமை பாலியல் குற்றங்கள் மற்றும் விபச்சாரங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என மத்திய பிரதேச ஐகோர்ட்டு கூறி உள்ளது.

இந்தூர்: 

அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட  திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) உரிமை பாலியல் குற்றங்கள் மற்றும் விபச்சாரங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்று மத்தியப் பிரதேச ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

25 வயது பெண் ஒருவரின் பாலியல் பலாத்புகார் தொடர்பான மனு ஒன்றின் விசாரணையின் போது மத்திய பிரதேச ஐகோர்ட்டில்  இந்தூர் பெஞ்சின் நீதிபதி சுபோத் அபியங்கர்  கூறியதாவது:-

சமீபத்திய காலங்களில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால்  பாலியல்  குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொள்ளும்போது, ​​​​லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் தடை செய்யலாம்  என்பதை இந்த நீதிமன்றம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த உறவு முறை இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை மூழ்கடித்து, காம நடத்தையை ஊக்குவிக்கிறது. மேலும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.  

பிரிவு 21 வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இந்த உறவு முறை பாலியல் குற்றங்களை  அதிகரிக்க செய்கிறது என கூறினார். 

புகார் அளித்த பெண் இரண்டு முறைக்கு மேல் கர்ப்பமாகிவிட்டதாகவும், விண்ணப்பதாரரின் அழுத்தத்தின் கீழ் கருவைக் கலைத்ததாகவும் வழக்கு டைரி மற்றும் ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

அவர்களின் உறவு முறிந்தபோது, ​​​​அந்தப் பெண் வேறு ஒருவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், ஆனால் பெண்ணுடன் வாழந்தவர்  அந்த பெண்ணை  அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார் என நீதிபதி கூறினார்.

Next Story