டெல்லியில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா - ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது


டெல்லியில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா - ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 20 April 2022 8:16 PM IST (Updated: 20 April 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,009- ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு வேகமாக பரவுவதால் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம் போன்ற நடவடிக்கைகளை அமல்படுத்த டெல்லி முடிவு செய்துள்ளது.  

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,009- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 319- பேர் குணம் அடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,641- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 5.70 சதவிகிதமாக உள்ளது. 

தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்தாலும் ஆறுதல் அளிக்கும் விதமாக மருத்துவமனையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் ஒரு சதவிதத்திற்கு குறைவான நபர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது உள்ளது டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story