வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த ‘ரிட்’ மனு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 April 2022 1:16 AM IST (Updated: 21 April 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த ‘ரிட்’ மனு தொடர்பாக, மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி, 

அறக்கட்டளை, மதம் சார்ந்த அறக்கட்டளைகள், வக்பு வாரியங்கள் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை, இந்திய சட்ட ஆணையம், மத்திய வக்பு வாரியம் ஆகியவை 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story