வருங்கால வைப்புநிதி: பிப்ரவரி மாதத்தில் 14 லட்சம் பேர் சேர்ந்தனர்
பிப்ரவரி மாதத்தில் வருங்கால வைப்புநிதியில் 14 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த பிப்ரவரி மாதத்தில் 14 லட்சத்து 12 ஆயிரம் நிகர சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்திருப்பதையும், வேலைவாய்ப்பு பெருகி இருப்பதையும் இது காட்டுவதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 9 லட்சத்து 52 ஆயிரம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். பெண்கள் மட்டும் 3 லட்சத்து 10 ஆயிரம் ஆவர்.
Related Tags :
Next Story