ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் கோவா முதல் மந்திரி சந்திப்பு


image courtesy: Dr. Pramod Sawant twitter
x
image courtesy: Dr. Pramod Sawant twitter
தினத்தந்தி 21 April 2022 10:43 AM IST (Updated: 21 April 2022 10:43 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த், அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

கோவா மாநில சட்டசபை தேர்தலில் 40 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. 2 வது முறையாக பிரமோத் சாவந்த் முதல் மந்திரியாக பதவியேற்றார். இந்த நிலையில் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக பிரமோத் சாவந்த் நேற்று தலைநகர் டெல்லி சென்றார்.

டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கோவா அரசின் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து உள்துறை மந்திரியிடம் தெரிவித்த பிரமோத் சாவந்த், அவரது வழிகாட்டுதல்களை பெற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளதால் அடுத்த அடுத்த பயணத்தின் போது பிரமோத் சாவந்த் பிரதமரை சந்திப்பார் என தெரிகிறது.

Next Story