மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் இருப்பு: மத்திய அரசு தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 April 2022 1:42 PM IST (Updated: 21 April 2022 1:42 PM IST)
t-max-icont-min-icon

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

20.16 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்னும் இருப்பு உள்ளதாக  மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நேரடி மாநில கொள்முதல் வகை மூலம் இதுவரை இலவசமாக 192.27 கோடிக்கும் (1,92,27,23,625) அதிகமான கொரோனா தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் வேகத்தை விரைவுபடுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16, 2021 அன்று தொடங்கியது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.


Next Story