காஷ்மீரில் நீர்மின் நிலையத்துக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில் 14 இடங்களில் சிபிஐ சோதனை!


காஷ்மீரில் நீர்மின் நிலையத்துக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில் 14 இடங்களில் சிபிஐ சோதனை!
x
தினத்தந்தி 21 April 2022 4:41 PM IST (Updated: 21 April 2022 4:41 PM IST)
t-max-icont-min-icon

இது தொடர்பான வழக்கில் செனாப் வேலி பவர் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக், காஷ்மீரில்  நீர்மின் நிலைய திட்டம் உட்பட இரண்டு திட்டங்களுக்கான  கோப்புகளில் அனுமதி அளித்து கையெழுத்து போடுவதற்காக தனக்கு ரூ.300 கோடி கொடுக்க முன்வந்ததாக குற்றம் சாட்டினார். ஆனால் அவற்றை தான் நிராகரித்துவிட்டதாக கூறியிருந்தார்.

இதனையடுத்து அவருக்கு லஞ்சம் கொடுக்க வந்தது தொடர்பாக சிபிஐ முழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் செனாப் வேலி பவர் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் குற்றம் சாட்டப்பட்ட இயக்குநர்கள் வீடுகள், அந்த தனியார் நிறுவனத்தின் வளாகங்கள் என செனாப் வேலி பவர் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

ஜம்மு, ஸ்ரீநகர், டெல்லி, மும்பை, நொய்டா, திருவனந்தபுரம் மற்றும்  பீகாரின் தர்பங்கா உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இந்த திட்டங்களுக்கன இ-டெண்டர் முறை பின்பற்றப்படவில்லை என்று சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

செனாப் வேலி பவர் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தின் முன்னாள் தலைவராக  சவுத்ரி பணியாற்றும் போது இ-டெண்டர் முறை இல்லாமல் படேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி நவீன் சவுத்ரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. 

படேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2,240 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணிகளை வழங்கும் போது இ-டெண்டர் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Next Story