மின்சார வாகனங்களில் தீ விபத்து: திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் - நிதின் கட்கரி


மின்சார வாகனங்களில் தீ விபத்து: திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் - நிதின் கட்கரி
x
தினத்தந்தி 21 April 2022 9:17 PM IST (Updated: 21 April 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

மின்சார வாகனங்களில் ஏற்படும் தீவிபத்து குறித்து உண்மை நிலை அறிய மத்திய அரசு குழு அமைத்துள்ளது என மத்திய நிதி மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மின்சார வாகனங்களில் ஏற்படும் தீவிபத்து குறித்து உண்மை நிலை அறிய மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது,

 மின்சார வாகனங்களில் தீ விபத்து குறித்த உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.'மின்சார வாகன தயாரிப்பின் போது நிறுவனங்கள் கவனக் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அந்நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். 

குறைபாடுள்ள மின்சார வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் என்று அமைச்சர் நித்தின் கட்கரி மேலும் தெரிவித்தார்.

Next Story