சோனியா காந்தியுடன் சச்சின் பைலட் சந்திப்பு..!!
சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சச்சின் பைலட் நேற்று சந்தித்தார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் நேற்று சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஆகியோரை சோனியாகாந்தி நேற்று முன்தினம் அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து, இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மேலும், காங்கிரசை வலுப்படுத்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த திட்டம் குறித்து காங்கிரசில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், சோனியாகாந்தியை சச்சின் பைலட் சந்தித்துள்ளார்.
ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்து, கட்சிக்கு புத்துயிரூட்டுவது குறித்து ஆலோசித்தார்.
Related Tags :
Next Story