நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்த வழக்கில் விசாரணை தள்ளிவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்த வழக்கில் விசாரணை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்.ஜி.டி.) தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வினீத் சரண், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், “தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது; மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பே முக்கியம்” என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு நீதிமன்றத்தில் வாதிட்டு வருவதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பார்ட்டி கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Related Tags :
Next Story