கர்நாடகா: ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் தேர்வை புறக்கணித்த மாணவிகள் !


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 April 2022 12:55 PM IST (Updated: 22 April 2022 12:55 PM IST)
t-max-icont-min-icon

தேர்வின் போது மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில்  பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். 

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்தது. அதனால் மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், உடுப்பி கல்லூரியில் 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வு எழுத வந்தனர். அப்போது ஹிஜாப்பை நீக்கிவிட்டு சீருடையுடன் தேர்வு எழுத வருமாறு ஆசிரியர்கள் கூறினர். இதனை ஏற்க மறுத்த அந்த 6 மாணவிகளும் தேர்வை புறக்கணித்தனர். 

ஹிஜாப் வழக்கைத் தொடர்ந்த 6 மாணவிகள் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு அறைக்குள் சென்றனர்.


Next Story