உக்ரைனில் போர் நிறுத்தம் குறித்து இங்கிலாந்து பிரதமரிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி..!


கோப்புப் படம் PTI
x
கோப்புப் படம் PTI
தினத்தந்தி 22 April 2022 8:49 PM IST (Updated: 22 April 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறினார். இதன்மூலம் இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவு வலுப்பெறும் என்றும் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாகவும் கூறினார். 

வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்களில் இருதரப்புக்கும் இடையேயும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதை வரவேற்பதாகவும் அவர் கூறினார். கிளாஸ்கோவில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டின் இலக்குகளை அடைய இந்தியா முயற்சித்து வருகிறது என்றும் இந்தியாவின் ஹைட்ரஜன் மிஷனில் இணைய இங்கிலாந்துக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

பாதுகாப்புத்துறை, வர்த்தகம், காலநிலை மற்றும் எரிசக்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டார். உக்ரைனில் உடனடி போர் நிறுத்தம் மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை வலியுறுத்தியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Next Story