கோவில் திருவிழாவில் காலணிகள் திருட்டு; வெறுங்காலுடன் வீடு திரும்பிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.


கோவில் திருவிழாவில் காலணிகள் திருட்டு; வெறுங்காலுடன் வீடு திரும்பிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 23 April 2022 6:31 PM IST (Updated: 23 April 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தர பிரதேச எம்.எல்.ஏ.வின் காலணிகள் திருடு போன நிலையில் வெறுங்காலுடன் அவர் வீடு திரும்பினார்.




ஆக்ரா,



உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் திப்புரி கிராமத்தில் ஷம்சாபாத் சாலையில் மாதா சதி கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலில் 2 நாள் திருவிழா நடைபெறுகிறது.  இதன் துவக்க விழாவில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை சேர்ந்த பதேகாபாத் தொகுதி எம்.எல்.ஏ. சோட்டேலால் வர்மா கலந்து கொண்டார்.

அவர் திருவிழாவை துவக்கி வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  இதன்பின் வீடு திரும்புவதற்காக வந்த அவரது காலணிகள் இரண்டும் திருடு போயின.  இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, என்னுடைய ஷூக்களை (காலணிகள்) யாரோ ஏழை அணிந்து சென்றிருக்க கூடும்.

அந்த ஏழை மனிதருக்கு மாதா சதி நல்லது செய்ய வேண்டும்.  அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என வேண்டி கொள்கிறேன்.

தொண்டர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் காலணிகளை இங்குமங்கும் நீண்டநேரம் தேடினார்கள்.  ஆனால் கிடைக்கவில்லை.  இதனால் வெறுங்காலுடனேயே வீடு திரும்ப முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.


Next Story