உத்தரபிரதேசத்தில் காதல் விவகாரத்தில் சிறுமி கவுரவ கொலை - தந்தை, சகோதரர் கைது


உத்தரபிரதேசத்தில் காதல் விவகாரத்தில் சிறுமி கவுரவ கொலை - தந்தை, சகோதரர் கைது
x
தினத்தந்தி 24 April 2022 5:23 AM IST (Updated: 24 April 2022 5:23 AM IST)
t-max-icont-min-icon

கவுரவ கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் குர்கா காலா என்கிற கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தாள். ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் காதல் விவகாரம் தொடர்பாக சிறுமியை கண்டித்தனர். அப்போது சிறுமி அவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள கால்நடை கொட்டகையில் புதைத்தனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் இந்த கவுரவ கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்தனர்.

Next Story