ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 25 பேர் காயம்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 24 April 2022 4:26 PM IST (Updated: 24 April 2022 4:26 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்தனர்.

பூரி,

ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து தமிழ்நாடு நோக்கி 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்தனர்.

கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ரம்பா அருகே நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதுகுறித்து போலீசார் கூறும்போது, பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். அவர்களில் 25 பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர் என்று கூறினார்.

கஞ்சம் கலெக்டரும் சத்ரபூர் சப்-கலெக்டரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்க மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

Next Story