ஜம்மு-காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


Image Courtesy : ANI
x
Image Courtesy : ANI
தினத்தந்தி 24 April 2022 5:23 PM IST (Updated: 24 April 2022 5:23 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சென்றார்.

ஸ்ரீநகர்,

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஷ்மீரின் சம்பா மாவட்டத்துக்குட்பட்ட பாலி பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சென்றார்.

பிரதமர் மோடி காஷ்மீருக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ரூ.3,100 கோடி மதிப்பில் ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள  பனிஹல்- காசிகுண்ட் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் உருவாக்குதல் அல்லது புனரமைத்தல் நோக்கமாக கொண்ட அம்ரித் சரோவர் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

பாலி பஞ்சாயத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 கிலோவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தையும் மோடி தொடங்கி வைத்தார். 

ரூ.7,500 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள டெல்லி- அமிர்தசரஸ்-சத்ரா எக்ஸ்பிரஸ் சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார் .

Next Story