தேனீ தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிய சிறுவன் மலையில் இருந்து விழுந்து உயிரிழப்பு..!
மராட்டிய மாநிலத்தில் தேனீ தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற 13 வயது சிறுவன் மலையில் இருந்து விழுந்து உயிரிழந்தான்.
புனே,
மராட்டிய மாநிலத்தில் புனேவிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதாரா மாவட்டத்தில் தேனீ கூட்டத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற 13 வயது சிறுவன் இன்று மதியம் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிவாஜிநகர் மலையில் சிறுவன் ஒரு மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் ஏழு முதல் எட்டு பேர் தேனீக்கடி காயங்களுக்கு ஆளானதாக அவர் கூறினார்.
மேலும் தேனீ தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடும் போது, சிறுவன் தன் சமநிலையை இழந்து மலையின் ஓரத்தில் இருந்து 300 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளான். சிறிது நேரம் கழித்து மலையேற்ற வீரர்கள் சிறுவனது உடலை வெளியே கொண்டு வந்தனர்," என்று அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story