தெலுங்கானா: பத்திரிகையாளர் நல நிதியாக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு; எம்.எல்.சி. கவிதா பேச்சு
தெலுங்கானாவில் பத்திரிகையாளர்கள் நல நிதியாக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என எம்.எல்.சி. கவிதா இன்று கூறியுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் பெண் பத்திரிகையாளர்கள் 250 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எம்.எல்.சி. கவிதா பங்கேற்று பேசும்போது, சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு பத்திரிகையாளர்கள் நலனுக்காக செய்த முயற்சிகளை விவரித்து கூறினார்.
நாட்டில் இதுவரை 18 ஆயிரம் பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரத்திற்கான அட்டைகளை வழங்கி உள்ள ஒரே மாநிலம் தெலுங்கானா. மிக பெரிய மாநிலங்கள் கூட 3 ஆயிரம் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அங்கீகாரத்திற்கான அட்டைகளை வழங்கி உள்ளது. தெலுங்கானாவுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக குறைவு.
தெலுங்கானா அரசு பத்திரிகையாளர்கள் நலனுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை எப்படி நாங்கள் பயன்படுத்தினோம்? பத்திரிகையாளர் ஒருவர் மரணம் அடைந்து விட்டால், அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
5 ஆண்டுகளுக்கு அவரது குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். விபத்தில் சிக்கும் பத்திரிகையாளருக்கு ரூ.50 ஆயிரம் அரசு வழங்குகிறது. இதுவரை ஒதுக்கீடு செய்த ரூ.100 கோடியில் ரூ.42 கோடி செலவிடப்பட்டு விட்டது என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story