வருகிற 27-ந் தேதி கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
வருகிற 27-ந் தேதி கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்
உப்பள்ளி,
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக கொரோனா பரவல் சில மாநிலங்களில் குறிப்பாக மராட்டியம், கேரளா, டெல்லியில் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த 3 அலைகளால் ஏற்பட்டுள்ள அனுபவங்கள் அடிப்படையில் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வருகிற 27-ந் தேதி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஒரு வழிகாட்டுதல் வெளியிடப்படும். பெங்களூருவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பாகிஸ்தானில் இருந்து அந்த மிரட்டல் வந்ததாக கூறப்படுவது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story