உ.பி: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் இளைஞர் கத்தியால் குத்திக்கொலை
உத்தரப்பிரதேசத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் பயங்கரமாக தாக்கினர்.
பட்டப்பகலில் நடு ரோட்டில் அந்த இளைஞரை மீண்டும் மீண்டும் முன்று பேரும் கத்தியால் குத்துகின்றனர். ரத்தம் படிந்த சட்டையுடன், அந்த இளைஞர் எழுவதற்கு முயன்றபோது, மூன்று பேரில் ஒருவர் முதுகில் குத்தி கீழே தள்ளுகிறார்.
வாகனங்களின் பொதுமக்கள் அதிகமாக செல்லும் சாலையின் நடுவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், ஒருவர் கூட தாக்குப்பவர்களை தடுத்து நிறுத்தவோ, இளைஞரை காப்பாற்றவோ முன்வரவில்லை. அனைவரும் கண்டும், காணாதபடி சென்றுகொண்டிருக்கிறார்கள்.
நடுரோட்டில் வலியால் துடித்த அந்த நபர், அசைவற்று கிடக்கிறார். இதையடுத்து அந்த மூன்று பேரும் அங்கிருந்து வெவ்வேறு திசைகளில் தப்பியோடினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, தனிப்பட்ட தகராறு காரணமாக, உயிரிழந்த நபரின் மாமாவே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும், குற்றவாளிகளை வலை வீசி தேடி வருவதாகவும், போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story