6 மாநில கவர்னராக பொறுப்பு வகித்த முதுபெரும் தலைவர் சங்கரநாராயணன் மறைவு!


Image Source: Twitter
x
Image Source: Twitter
தினத்தந்தி 25 April 2022 10:54 AM IST (Updated: 25 April 2022 10:54 AM IST)
t-max-icont-min-icon

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் கே.சங்கரநாராயணன் உடல் நலக்குறைவால் காலமானார்.

திருவனந்தபுரம்,
 
முதுபெரும் காங்கிரஸ் தலைவர் கே.சங்கரநாராயணன்(89), உடல் நலக்குறைவால் பாலக்காட்டில் நேற்றிரவு காலமானார். அவருடைய மறைவிற்கு  கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

முன்னாள் கேரள முதல்-மந்திரிகள் கே கருணாகரன், ஏ.கே.அந்தோணி ஆகியோரது அமைச்சரவையில் சங்கரநாராயணன் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அவர் கேரள சட்டசபைக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மராட்டியம், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், அசாம், கோவா, ஜார்க்கண்ட்  ஆகிய 6 மாநிலங்களின் கவர்னராகவும் சங்கரநாராயணன் இருந்துள்ளார். 

Next Story