ஒடிசாவில் வெப்ப அலை; நாளை முதல் 5 நாட்கள் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு


ஒடிசாவில் வெப்ப அலை; நாளை முதல் 5 நாட்கள் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு
x
தினத்தந்தி 25 April 2022 9:02 PM IST (Updated: 25 April 2022 9:02 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் நிலவி வரும் வெப்ப அலையை முன்னிட்டு நாளை முதல் 5 நாட்கள் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.




புவனேஸ்வர்,



இந்தியாவில் வடமாநிலங்களில் கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப அலையால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.  புயல், கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட கூடிய ஒடிசாவில் கோடை வெப்பமும் தனது உக்கிர நிலையை காட்டி வருகிறது.

இதனால், மக்கள் வெப்பம் சார்ந்த தோல் வியாதிகளை எதிர்கொள்வதுடன் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.  இந்த நிலையில், ஒடிசாவில் ஏற்பட்டு உள்ள வெப்ப அலையை முன்னிட்டு நாளை முதல் (ஏப்ரல் 26) வருகிற 30ந்தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி கூடங்களையும் மூடும்படி ஒடிசா அரசு உத்தரவிட்டு உள்ளது.

எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறுவதில் எந்த தடையும் இருக்காது என்றும் இதுபற்றிய அறிவிப்பில் அரசு தெரிவித்து உள்ளது.


Next Story