முதல்-மந்திரிகளுடன் நாளை ஆலோசனை: பிரதமர் மோடியின் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்பு
முதல்-மந்திரிகளுடன் நாளை நடைபெறும் காணொலியில் ஆலோசனையில், கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார்.
கொல்கத்தா,
இந்தியாவில் மீண்டும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலமாக நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். பா.ஜ.க. அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இந்த கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் வலுத்து வந்தது. ஆனால், அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலக அதிகாரி கூறுகையில், ‘பிரதமர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story