இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 26 April 2022 10:19 AM IST (Updated: 26 April 2022 10:19 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 541-ஐ விட குறைவாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 970 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கொரோனா தாக்குதலுக்கு மேலும் 1 ஆயிரத்து 347 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. கேரளா (47) மற்றும் அசாமில் (1,347) ஏற்கனவே உயிரிழந்து மாநில பட்டியலில் சேர்க்கப்படாத எண்ணிக்கை மறுகணக்கீட்டின்படி சேர்க்கப்பட்டதால் இன்று அதிக அளவிலான உயிரிழப்பு பதிவானதற்கு காரணமாகும். 

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது. 

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 95 லட்சத்து 76 ஆயிரத்து 423 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story