சிறுவர்களுக்கு பொது தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே, 2 - 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி கோரி, பரிசோதனை முடிவுகளையும், தரவுகளையும் சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்து, 'பாரத் பயோடெக்' நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்தது.
இந்நிலையில், 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு அவசர காலத்தில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 'சைடஸ் கேடில்லா' தடுப்பூசியும் செலுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
Related Tags :
Next Story