வெப்ப அலை பாதிப்பு; ஒடிசாவில் நாளை முதல் மே 2 வரை இளநிலை, முதுநிலை வகுப்புகள் ரத்து


வெப்ப அலை பாதிப்பு; ஒடிசாவில் நாளை முதல் மே 2 வரை இளநிலை, முதுநிலை வகுப்புகள் ரத்து
x
தினத்தந்தி 26 April 2022 2:29 PM IST (Updated: 26 April 2022 2:29 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் நிலவி வரும் வெப்ப அலையை முன்னிட்டு நாளை முதல் மே 2 வரை அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.



புவனேஸ்வர்,


இந்தியாவில் நடப்பு ஆண்டில் கோடை காலத்தில் கடும் வெப்பம் ஏற்பட்டு உள்ளது.  வடமாநிலங்களில் வெப்ப அலையால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.  அனல் காற்றும் வீசி வருகிறது.

ஒடிசாவில் புயல், கனமழையால் கடுமையாக பாதிப்பு ஏற்பட கூடிய சூழலில், கோடை வெப்பமும் சேர்ந்து தனது உக்கிர நிலையை காட்டி வருகிறது.  இதனால், மக்கள் வெப்பம் சார்ந்த தோல் வியாதிகளை எதிர்கொள்வதுடன் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஒடிசாவில் ஏற்பட்டு உள்ள வெப்ப அலையை முன்னிட்டு ஏப்ரல் 27ந்தேதி முதல் (நாளை) மே 2ந்தேதி வரை 6 நாட்களுக்கு உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து உயர்நிலை கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு நேற்று வெளியான அறிவிப்பில், இன்று முதல் (ஏப்ரல் 26) வருகிற 30ந்தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி கூடங்களையும் மூடும்படி ஒடிசா அரசு உத்தரவிட்டு இருந்தது.

எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறுவதில் எந்த தடையும் இருக்காது என்றும் இதுபற்றிய அறிவிப்பில் அரசு தெரிவித்துள்ளது.


Next Story