காங்கிரசில் சேர பிரசாந்த் கிஷோர் திடீர் மறுப்பு


(Credits: PTI)
x
(Credits: PTI)
தினத்தந்தி 26 April 2022 3:59 PM IST (Updated: 26 April 2022 4:48 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியில் இணைய தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து விட்டாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேராவிட்டாலும் ஆலோசனைகள் வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் அண்மையில் ஆலோசனை நடத்தி இருந்தார் பிரசாந்த் கிஷோர்.

காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கட்சி மேலிடம் தகவல் தெரிவித்துள்ளது. 

பிரசாந்த் கிஷோரை காங்கிரசில் சேர்க்க கட்சிக்குள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேலிடம் இது குறித்தும் விளக்கம் அளித்துள்ளது. 

Next Story