ஹெல்மெட் இல்லை... போடு ரூ.500 அபராதம்; கார் உரிமையாளருக்கு வந்த சோதனை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 April 2022 11:38 AM GMT (Updated: 26 April 2022 11:38 AM GMT)

கேரளாவில் ஹெல்மெட் அணியவில்லை என கூறி ரூ.500 அபராதம் செலுத்தும்படி கார் உரிமையாளருக்கு போலீசார் செலான் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.




திருவனந்தபுரம்,



கேரளாவில் வசித்து வரும் அஜித் என்பவருக்கு கேரள போக்குவரத்து போலீசாரிடம் இருந்து செலான் ஒன்று வந்துள்ளது.  மாருதி ஆல்டோ காரின் உரிமையாளரான அஜித், ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  தேதியும் 2021ம் ஆண்டு டிசம்பர் 7 என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த செலானுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது.  அதில், பைக் ஒன்றில் ஹெல்மெட் அணியாமல் 2 பேர் அமர்ந்து செல்லும் காட்சி இடம் பெற்று உள்ளது.

செலானில், வாகனம் ஆனது மோட்டார் கார் வகையை சேர்ந்தது என்றும் பதிவு எண் கூட அஜித்தின் கார் எண்ணும் இருந்துள்ளது.  இதனால், அதிர்ச்சியான அஜித் மோட்டார் வாகனங்களுக்கான துறையில் இதுபற்றி புகார் அளிக்க போகிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

எனினும், செலானில் வாகனத்தின் பதிவு எண்ணை பதிவு செய்யும்போது ஏற்பட்ட தவறால் இது நிகழ்ந்திருக்க கூடும் என போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.


Next Story