பணிநீக்கம்: ஆத்திரத்தில் பெண்ணை உயிருடன் கொளுத்திய நபர் தீயில் எரிந்து பலி


பணிநீக்கம்:  ஆத்திரத்தில் பெண்ணை உயிருடன் கொளுத்திய நபர் தீயில் எரிந்து பலி
x
தினத்தந்தி 26 April 2022 8:06 PM IST (Updated: 26 April 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் வேலையில் இருந்து நீக்கியதற்காக பெண்ணை தீ வைத்து உயிருடன் கொளுத்திய நபர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.




புனே,



மராட்டியத்தின் புனே நகரில் வடகான்சேரி பகுதியில் டெய்லர் கடை ஒன்றில் 35 வயது நபர் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கடையின் உரிமையாளரான பெண், அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.

இதனால், அந்த பெண் மீது ஆத்திரத்தில் இருந்த நபர் நேற்றிரவு கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.  பின்னர் திடீரென அந்த பெண் மீது தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

எனினும், இந்த சம்பவத்தில் அந்த நபர் மீதும் தீ பற்றி எரிந்துள்ளது.  இதனால், அவர் சத்தம் போட்டு அலறியுள்ளார்.  அவரது கூக்குரல் கேட்டு மற்றொரு நபர் காப்பாற்ற ஓடி வந்துள்ளார்.  தீயை அணைக்க முயன்ற அவர் மீதும் தீப்பிடித்து கொண்டது.

இதனை தொடர்ந்து, 3 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  எனினும், வேலையில் இருந்து நீக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.  பெண் மற்றும் காப்பாற்ற ஓடி வந்த மற்றொரு நபர் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story