அதிகரிக்கும் கொரோனா: அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!


கோப்புப் படம் PTI
x
கோப்புப் படம் PTI
தினத்தந்தி 27 April 2022 7:03 AM IST (Updated: 27 April 2022 7:03 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

புதுடெல்லி, 

நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வௌியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஒரு நாளில் 2 ஆயிரத்து 483 தொற்றுகளுடன், நாட்டில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 636 ஆக உயர்ந்திருக்கிறது.

புதிதாக 1,347 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்க 5 லட்சத்து 23 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இதுதொடர்பாக ஒரு அறிக்கையை வழங்குவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story