கொரோனா சவால் இன்னும் முறியடிக்கப்படவில்லை - பிரதமர் மோடி


கொரோனா சவால் இன்னும் முறியடிக்கப்படவில்லை - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 April 2022 2:25 PM IST (Updated: 27 April 2022 2:25 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சவால் இன்னும் முறியடிக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதல்-மந்திரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

கொரோனா  சவால் இன்னும் முறியடிக்கப்படவில்லை. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா நெருக்கடியை சிறப்பாக நிர்வகித்தாலும், இப்போது மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரிப்பதைக் காணலாம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெயிலுக்கு மத்தியில் அதிகரித்து வரும் தீ விபத்துகளைத் தடுக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். 

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை அதிகரிக்கவேண்டும்.

 தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசியை விரைவாக வழங்குவது நமது  முன்னுரிமை அதே நேரத்தில் பொது இடங்களில் கொரோனா  நடமுறை கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பஞ்சாப், சட்டீஸ்கர், திரிபுரா மற்றும் பிற மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

Next Story