“காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியாது” - ஏ.கே.அந்தோணி


“காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியாது” - ஏ.கே.அந்தோணி
x
தினத்தந்தி 27 April 2022 9:28 PM IST (Updated: 27 April 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசை குறைத்து மதிப்பிடக் கூடாது என ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியாது என முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ஏ.கே.அந்தோணி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

“காந்தி குடும்பத்தினர்தான் கட்சியை வழிநடத்தும் சக்தி பீடம். அவர்கள் காங்கிரஸ் சிந்தனையை வெளிப்படுத்துபவர்கள். அவர்களுக்கு 99 சதவிகித காங்கிரஸ் தொண்டர்களின் ஆதரவு உள்ளது. காங்கிரசை குறைத்து மதிப்பிடக் கூடாது. காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கமானவராக அறியப்படுவர் ஏ.கே.அந்தோணி. காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்தி கிஷோர் மறுத்ததையடுத்து, அந்தோணியின் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.

Next Story