கேரளா: மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் தூக்கில் தொங்கிய நபர் சடலமாக மீட்பு
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
கொல்லம்,
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
காலை 7 மணியளவில் ரயில் கொல்லம் ரயில் நிலையத்தை அடைந்தபோது மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியின் கழிப்பறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
ரயில்வே அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வந்து உடலைக் கொல்லத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழிவறையில் இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, சடலம் கண்டெடுக்கப்பட்ட பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டதை அடுத்து இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு திருவனந்தபுரத்திற்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story