விமான எரிபொருளுக்கு அதிக வரி விதிப்பதா..? - பெட்ரோலிய மந்திரி கண்டனம்


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 29 April 2022 12:23 AM IST (Updated: 29 April 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

விமான எரிபொருளுக்கு அதிக வரி விதிப்பதாக எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு பெட்ரோலிய மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளம், மராட்டியம், டெல்லி ஆகிய எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், விமான எரிபொருள் மீது 25 சதவீதத்துக்கு மேல் ‘வாட்’ வரி விதிக்கின்றன. அதனால்தான், விமான டிக்கெட் கட்டணம் குறையாமல் இருக்கிறது. இது எதிர்க்கட்சிகளின் கபட நாடகத்தை காட்டுகிறது. ஆனால், பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசம், நாகாலாந்து மற்றும் காஷ்மீரில் வெறும் 1 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி, சாமானியர்களுக்கும் மலிவான விமான பயணம் கிடைப்பதை உறுதி செய்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. அவை போராட்டத்தை தூண்டி விடுவதுடன், மக்களை கொள்ளையடித்து கஜானாவை நிரப்புகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

Next Story