ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு: இன்று நடக்கிறது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 April 2022 3:26 AM IST (Updated: 29 April 2022 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி, 

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாட்டை, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளின் மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளை முன்னுரிமை அடிப்படையில் இணையம் வழியாக இணைப்பது, மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேவையான மனித வளம், பணியாளர் கொள்கை, கோர்ட்டுகளின் உள்கட்டமைப்பு, திறன் வளர்ப்பு, நீதிசார் சீர்திருத்தங்கள், ஐகோர்ட்டுகளுக்கான நீதிபதிகள் நியமனம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன.

ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாடு 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story