பஞ்சாப்: 1857-ம் ஆண்டு கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் எலும்பு கூடுகள் மரபணு ஆய்வில் கண்டுபிடிப்பு


பஞ்சாப்: 1857-ம் ஆண்டு கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் எலும்பு கூடுகள் மரபணு ஆய்வில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 29 April 2022 8:43 AM IST (Updated: 29 April 2022 8:43 AM IST)
t-max-icont-min-icon

1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின்போது, ஆங்கிலேய அதிகாரிகளை அவர்கள் கொலை செய்தனர்.

சண்டிகார், 

பஞ்சாப் மாநிலம் அஜ்னாலா நகர் அருகே ஒரு பழைய கிணற்றில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஏராளமான மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை யாருடையவை என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகின. பஞ்சாப் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் ஷெராவத், ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு உயிரியல் மையம், உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மரபணு ஆய்வில் ஈடுபட்டார்.

அதில், அந்த எலும்புக்கூடுகள், மேற்கு வங்காளத்தின் கிழக்கு பகுதி, ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் இடம் பெற்ற 26-வது வங்காள காலாட்படை வீரர்களுடையவை என்று தெரிய வந்தது.

அவர்கள் தற்போதைய பாகிஸ்தானில் பணிபுரிந்து வந்தனர். 1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின்போது, ஆங்கிலேய அதிகாரிகளை அவர்கள் கொலை செய்தனர். பின்னர், பஞ்சாப் மாநிலம் அஜ்னாலா அருகே பிடிபட்டு, ஆங்கிலேய படையால் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் எலும்புக்கூடுகள்தான் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Next Story