டெல்லியில் போலீசார் என்கவுண்ட்டரில் ரவுடி காயம்


டெல்லியில் போலீசார் என்கவுண்ட்டரில் ரவுடி காயம்
x
தினத்தந்தி 29 April 2022 8:50 AM IST (Updated: 29 April 2022 8:50 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போலீசாருக்கும், ரவுடிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்ததில் ஒருவர் காயமடைந்து உள்ளார்.


புதுடெல்லி,



டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சித்தரஞ்சன் பூங்காவில் ரவுடிகள் சிலர் இன்று காலை அட்டகாசம் செய்துள்ளனர்.  இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடிகளில் ஒருவர் காயமடைந்து உள்ளார்.  உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


Next Story