இந்தி பேச முடியாது என்றால் வெளிநாட்டுக்கு செல்லலாம்; உ.பி. மந்திரி சர்ச்சை பேச்சு
இந்தி மொழி குறித்த உத்தர பிரதேச மந்திரியின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவரும், அம்மாநில மந்திரியுமான சஞ்சய் நிஷாத் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
'இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தி மீது பற்று இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவர். உங்களுக்கு இந்தி பேச முடியாதென்றால் நீங்கள் இந்தியாவை விட்டு விட்டு வேறு நாட்டுக்குச் செல்லலாம்" என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் இந்தி மொழி குறித்த விவாதம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், இந்தி மொழி குறித்த உத்தர பிரதேச மந்திரியின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story