மத்திய பிரதேசம்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3.5 லட்சம் மாணவர்கள் தோல்வி


மத்திய பிரதேசம்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3.5 லட்சம் மாணவர்கள் தோல்வி
x
தினத்தந்தி 29 April 2022 6:39 PM IST (Updated: 29 April 2022 6:39 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 3,55,371 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தின் இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதினர். 

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 3,55,371 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் 3,48,219 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 60 சதவீதத்திற்கும் குறைவாக இருந்துள்ளது. இந்த ஆண்டு முடிவுகளின்படி, 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 59.54 சதவீதமாகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 72.72 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story