உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சித்தார்..! பிரபல நடிகர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டு


உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சித்தார்..! பிரபல நடிகர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 April 2022 9:04 PM IST (Updated: 30 April 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

அன்றைய தினம்தான் முதன்முதலில் இருவரும் சந்திக்கிறோம்.ஆனாலும் விஜய்பாபு வலுக்கட்டாயமாக என் உதட்டில் முத்தமிட முயன்றார்.

கொச்சி,

விஜய் பாபுவின் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், ஏப்ரல் 22ஆம் தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவால்  தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் சுரண்டல்களை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார்.

இதற்கிடையே, விஜய் பாபு திடீரென பேஸ்புக் நேரலை அமர்வு மூலம் உரையாடினர். அப்போது அவர், பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை வேண்டுமென்றே பொதுவெளியில் அம்பலப்படுத்தினார்.

இதனையடுத்து நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கின் விசாரணையில், பாதிக்கப்பட்ட நடிகை தனது புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில், முதன்மை ஆதாரங்கள் இருக்கின்றன என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து, நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு இன்று கேரள போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.இதற்கிடையில், பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததையடுத்து, நடிகர் தரப்பில் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் தற்போது கேரள நடிகர் விஜய் பாபு மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கேரளாவில் #மீ-டூ என்ற இன்ஸ்டாகிராம் பதிவில், பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் புகார் அளித்துள்ளார்.அவர் அதில் கூறியிருப்பதாவது:-

"நடிகர் விஜய் பாபு மீது போலீசில் புகார் அளித்ததால், சமூகத்தின் ஒரு பிரிவினரின் ஏளனத்தை அந்த நடிகை எதிர்கொண்டார். அதனையடுத்து நடிகைக்கு ஆதரவாக இப்போது இந்த சம்பவத்தை பதிவிடுகிறேன்.

சினிமா வேலை தொடர்பான ஒரு சந்திப்பின் போது, துன்புறுத்தல் நிகழ்ந்தது. அன்றைய தினம் தான் முதன்முதலில் இருவரும் சந்திக்கிறோம். விஜய் பாபுவுக்கு என்னை வெறும் 20-30 நிமிடங்கள் மட்டுமே தெரியும்.ஆனாலும் அந்த நடிகர் வலுக்கட்டாயமாக என் உதட்டில் முத்தமிட முயன்றார். 

அவர் மது அருந்திவிட்டு எனக்கும் கொடுத்தார். நான் மறுத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தேன். திடீரென்று, அவர் என் உதடுகளில் முத்தமிட சாய்ந்தார்.சட்டென்று எந்தக் கேள்வியும் கேட்காமல், சம்மதிக்காமல் என் உதடுகளில் முத்தமிட மட்டும் அவன் சாய்ந்தான்.

அதிர்ஷ்டவசமாக, எனது அனிச்சை செயல் மிக விரைவாக இருந்தது. மேலும் அவனிடமிருந்து ஒரு தூரத்தை பராமரிக்க நான் என்னை பின்நோக்கி இழுத்தேன்.

அப்போது நான் அவன் முகத்தைப் பார்த்தேன், அவன் என்னிடம் ‘ஒரே ஒரு முத்தம்?’ என்று கேட்டான்.

அந்த சம்பவம் என் ஆழ்மனதில் அதிர்ச்சியடைய செய்தது. திரையுலகில் இருந்து என்னை விலக்கி கொள்ள வைத்தது அந்த மோசமான சம்பவம்.” 

இந்த புகார்களுக்கெல்லாம் முன்னதாக, சினிமா இணை தயாரிப்பாளரான சாண்ட்ரா தாமஸ் என்பவர், தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். ஆனால் அந்த வழக்கு விரைவில் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story