யோகாவுக்கு உரிமை கொண்டாட சில நாடுகள் முயற்சி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
சில நாடுகள் யோகாவுக்கு உரிமை கொண்டாட முயற்சிக்கின்றன, ஆனால், யோகா கலை இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
ஷரான்புர்,
சில நாடுகள் யோகாவுக்கு உரிமை கொண்டாட முயற்சிக்கின்றன, ஆனால், யோகா கலை இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் ஷகரன்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத் மேலும் கூறுகையில், “ உலகில் உள்ள சில நாடுகள் யோகாவிற்கு உரிமை கொண்டாட முயற்சிக்கின்றன.
இதனால், யோகா இந்தியாவுக்கு சொந்தமானது என நாம் முன்வந்து சொல்ல வேண்டியுள்ளது. நமது கலாசாரத்தின் தூதர்களாக நாம் ஆக வேண்டும். இந்தியாவில் மட்டுமே ஆன்மிக அறிவும் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும். "இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் யோகா பாரம்பரியம் மிகவும் பழமையான அமைப்பு அமைப்பு என்பதை ஒட்டுமொத்த உலகமும் அங்கீகரிக்கிறது. யோகாவின் மூலம் அறிவின் உச்சத்தை அடையலாம்” என்றார்.
Related Tags :
Next Story