சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது- மத்திய மந்திரி அஸ்வினி குமார்


சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது- மத்திய மந்திரி அஸ்வினி குமார்
x
தினத்தந்தி 1 May 2022 3:24 AM IST (Updated: 1 May 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக மத்திய மந்திரி அஸ்வினி குமார் கூறியுள்ளார்.

விலை உயர்வு

உக்ரைன் - ரஷியா போா் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கிடு, கிடு வென உயர்ந்து உள்ளது. குறிப்பாக சூரிய காந்தி எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து உள்ளது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக மத்திய உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை இணை மந்திரி அஸ்வினி குமார் கூறியுள்ளார்.

மத்திய அரசு நடவடிக்கை

இதுகுறித்து அவர் மராட்டிய மாநிலம் புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமையல் எண்ணெயை அரசு வெளிநாடுகளிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்த நிலையிலும் பொது மக்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட விலையில் எண்ணெய் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விலையை கட்டுக்குள் வைக்கவும் பணியாற்றி வருகிறோம். அத்தியாவசிய பொருட்களான எண்ணெய், பருப்பு இருப்பை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சந்தையில் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை பதுக்குபவர்களை மாநில அரசுகள் கண்டறிய வேண்டும்" என்றார்.



Next Story