பசுக்களுக்கு தனி ஆம்புலன்ஸ் சேவை: அசாமில் அதிரடி திட்டம்


பசுக்களுக்கு தனி ஆம்புலன்ஸ் சேவை: அசாமில் அதிரடி திட்டம்
x
தினத்தந்தி 1 May 2022 6:46 AM IST (Updated: 1 May 2022 6:46 AM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநிலத்தில் பசுக்களுக்கு தனி ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

திப்ருகர், 

அசாம் மாநிலத்தில் முதல் முறையாக நோய் வாய்ப்பட்ட பசு மாடுகளை காக்கும் நோக்கில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

திப்ருகர் மாவட்டத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. கோபால் கவுசாலா என்கிற பசுக்கள் நல அமைப்பால் நடத்தப்படும் இந்த சேவையை திப்ருகர் துணை ஆணையர் பிஸ்வஜித் பெகு தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து கோபால் கவுசாலா தலைவர் நிர்மல் பெரியா கூறுகையில், “வடக்கு கிழக்கு மாநிலங்களின் முதல் பசு ஆம்புலன்ஸ் சேவை. பசுக்களை அழைத்து வருவதில் காப்பக நிர்வாகிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க இயலாமல் சில பசுக்கள் இறந்தன. இதையடுத்து பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை, தனக்கு சொந்தமான அறக்கட்டளை வாயிலாக துவக்கப்பட்டு இருக்கிறது” என்று அவர் கூறினார். 

Next Story