வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 May 2022 9:30 AM IST (Updated: 1 May 2022 9:30 AM IST)
t-max-icont-min-icon

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ஆயிரத்து 253 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று உயர்த்தியுள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள ஒரு வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 102 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2253ல் இருந்து ரூ.2355.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 655 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story