எல்லைப்பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுகிறது, ஆனால்....ராணுவ தலைமை தளபதி பேட்டி
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து ராணுவ தலைமை தளபதி பேட்டியளித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளின் நிலவும் சூழல் குறித்து அளித்துள்ள பேட்டியின் கூறியதாவது;
"இந்திய ராணுவம் கடந்த இரண்டு ஆண்டுகளின் அதிகப்படியான எல்லை பிரச்சனைகளை சந்தித்துள்ளது. தற்போது படைகள் மறுசீரமைக்கப்பட்டு உள்ளது. எல்லைப்பகுதிகளில் வீரர்கள் மிகவும் உறுதியான மனநிலையில் உள்ளனர்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையே பதற்றத்தை தணிக்கும் வழி. பேச்சுவார்த்தையின் மூலம் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று நாங்கள் நம்புகிறோம், இராணுவத்தின் நோக்கம் எல்லைப்பகுதிகளில் உள்ள பதட்டங்களைக் குறைப்பதும், நிலைமையை விரைவில் மீட்டெடுப்பதும் ஆகும்.
பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதியை பொருத்தவரையில், எல்லைப்பகுதிகளில் பொதுமக்களிடையே அமைதியான சூழல் நிலவுகிறது. ஆனாலும், சில பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து கானப்படுகிறது.
எல்லைப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது". இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story