மராட்டியத்தில் மேலும் 169- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 169- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 169 - பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 77 ஆயிரத்து 901- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 843- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 995- ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 155- ஆக இருந்தது. உயிரிழப்பு ஒன்றும் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், தொற்று பாதிப்பு இன்று சற்று அதிகரித்து இருக்கிறது.
மராட்டியத்தில் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 98.11 சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.87- சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 24,165 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story