உத்தரபிரதேசத்தில் பணிக்கு சேர்ந்த முதல் நாளில் ஆஸ்பத்திரியில் தூக்கில் தொங்கிய நிலையில் நர்சு பிணமாக மீட்பு கற்பழித்து கொலையா?


உத்தரபிரதேசத்தில் பணிக்கு சேர்ந்த முதல் நாளில் ஆஸ்பத்திரியில் தூக்கில் தொங்கிய நிலையில் நர்சு பிணமாக மீட்பு கற்பழித்து கொலையா?
x
தினத்தந்தி 2 May 2022 4:46 AM IST (Updated: 2 May 2022 4:46 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட பங்கர்மாவ் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது.


உன்னாவ், 

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட பங்கர்மாவ் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இங்கு 18 வயதான நர்சு ஒருவர் நேற்று முன்தினம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நர்சின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் அன்றுதான் அந்த ஆஸ்பத்திரியில் பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது.

அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், ஆஸ்பத்திரியின் நிர்வாகிகள்தான் இதற்கு காரணம் என்றும் நர்சின் தாய் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் நர்சு கற்பழிக்கப்பட்டதற்கான தடயம் எதுவும் பிரேத பரிசோதனையில் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். எனினும் இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே நர்சு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உன்னாவ் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story