குஜராத்தில் பேருந்து மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!!
குஜராத்தில் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
சுரேந்திரநகர்,
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள லிம்ப்டி அருகே பேருந்து மீது வேன் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் படுகாயமடைந்தனர்.
முன்னதாக ராஜ்கோட்டில் இருந்து ராஜஸ்தானுக்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 6 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் வேன் எதிர் திசையில் இருந்து வந்த பேருந்தின் மீது பலமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.
அகமதாபாத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ராஜ்கோட்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள கட்டாரியா கிராமம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இறந்த நான்கு பேரும், 20 வயதுடையவர்கள் என்றும் ராஜ்கோட்டில் வசிப்பவர்கள் என்றும் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர்கள் லிம்ப்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story