திருப்பதி மாடவீதியில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் கடத்தல்...!
திருப்பதி மாடவீதியில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவனை பெண் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த தாமனேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் நெற்றியில் நாமம் இட்டு பக்தர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று வந்தார். இவரது மகன் கோவர்தன் (வயது5). நேற்று காலை வெங்கட்ரமணா கோவில் அருகே பக்தர்களுக்கு நெற்றியில் நாமம் விட்டுக்கொண்டு இருந்தார்.
மகன் கோவர்தன் மாட வீதியில் விளையாடிக் கொண்டு இருந்தார். மாட வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போனார். கோவர்தன் காணாமல் போனதால் பதற்றமடைகிறாள் தந்தை வெங்கட்ரமணா பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருமலை 2-வது நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாடவீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சியில் சுமார் 30 வயதுடைய மொட்டையடித்த இளம்பெண் ஒருவர் சிறுவனின் கையை பிடித்து அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மாலை 6 மணிக்கு திருமலையில் உள்ள பாலாஜி பஸ் நிலையத்திலிருந்து சிறுவனை பஸ்சில் அழைத்து செல்லும் காட்சிகளும், 7 மணி அளவில் திருப்பதி பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து சிறுவனை இளம்பெண் எங்கு கடத்திச் சென்றார் என தீவிரமாக தேடி வருகின்றனர். ஏழுமலையான் கோவில் அருகே மாட வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story